Moorthy

Tamil Blog

Sunday, January 23, 2005

புது வருடத்திற்கான முதல் பதிவு...

என் இனிய தமிழ் மக்களே! உங்கள் பாசத்திற்குரிய பார..மன்னிக்க...மூர்த்தி இந்த ஆங்கிலப் புது வருடத்தில் படைத்திருக்கும் முதல் படைப்பு இது. பெருந்திரளென என் வலைப்பக்கத்திற்கு வந்து, வலைப்பதிவுகளை படித்துக் களிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
(இதை வலைப்பதிவென்று அழைப்பது எவ்வளவு பொருத்தம். வலை எங்கு பதியும்? யாருமே உபயோகிக்காத இடங்களில் தானே? - This is "overmuser" at work again!)
---------
இன்றிலிருந்து வாரத்திற்கு ஒரு முறையேனும் ஏதேனும் பதிவு செய்வதாய் உத்தேசம்.
யாரேனும் படிக்கிறார்களோ இல்லையோ, தமிழில் எழுத மறக்காமலிருப்பதற்கேனும் உதவும். (புது வருஷத்ல மொத post போடரதுக்கு மூணு வாரம் ஆயிருக்கு. இவனெல்லாம் வாரத்துக்கு ஒரு தடவையாவது எழுதப் போறானாம். போடாங்...)
-------

எல்லோரும் ஆவலாகப் பார்க்க/படிக்கக் காத்திருக்கும் (??!!) என்னுடய பழைய, 'தினம் ஒரு கவிதை' மின்னஞ்சல் குழுவில் வெளியான கவிதைகள் சிலவற்றை மறுபதிப்பு செய்திருக்கிறேன். இதுகாரும் பொருமை காத்த என் கோடானு கோடி ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்.

காந்தியும் நானும் ஒரே நாட்டுக்காரர்கள் ஆகையால், சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டும் என்று மனசும், விரல்களும் துடிக்கின்றன. அதனால்...

1) கவிதை எனக்கு எளிதாய் வருவதில்லை. கடந்த ஆறு வருடங்களில் பத்து கவிதை எழுதியிருந்தால் அதிகம்.

2) சரக்கிண்மை, சோம்பல் - இரண்டும் என்னுடைய lack of productivity-க்குக சம அளவில் காரணம்.

3) அதிகமாக cyberspace-ல் உலவாததற்கு, ஆங்கிலத்தில் தட்டச்சி, தமிழில் வார்த்தைகளை வரவழைப்பதில் உள்ள ஆயாசம் காரணம்.

3) எழுதிய கவிதைகள் பத்தில் ஐந்தையோ ஆறையோ 'தினம் ஒரு கவிதை'க்கு அனுப்பினேன். அந்நாள் லாவண்யா, இந்நாள் என். சொக்கன் புண்ணியத்தில் ஒன்றிரண்டைத் தவிற அனைத்தும் 'ஃபோட்டோ ஷாப்' ஏறின. (வாழ்க லாவண்யா/என். சொக்கன்/நாகாஸ்! வளர்க அன்னாரது புகழ்! - நான் எழுதியவற்றையெல்லாம் வசைமொழி பொழியாமல் சகித்து வந்த குழு நண்பர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்!)

4) அந்த ஐந்து, ஆறில் தேடிப் பிடித்த மூன்றைத்தான் இன்று காணப் போகிறீர்கள். இங்கு 'தேடிப் பிடித்த' என்பதன் சரியான அர்த்தத்தைத் விளக்கக் கடமைப் பட்டவனாகிறேன். ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு ஊரிலிருக்கும் போது, வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி உபயோகிக்கும் போது வெளியாகினவாகையால், எல்லாமே prompt ஆக archive செய்யப் பட்டனவாகையால், இந்த மூன்று முத்துக்களை (டேய், அடங்குடா!) தேடிப் பிடிப்பது, இவற்றை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமாயிருந்தது. (உண்மையான கவிஞனாயிருப்பின் மறுபடி எழுதியிருப்பான். என் போன்ற அதிமேதாவிக்கு எழுதிய ஐந்து நிமிடம் கழித்துக் கேட்டால் கூட வார்த்தையெல்லாம் மாத்தி மாத்தி போட்டு தத்துப் பித்துவென்று உளறத் தான் தெரியும். இதில் மறுபடி எழுதுவதாவது? அடப்போங்கய்யா...)
----------------------------
இனியும் உங்களை நகம் கடிக்க வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இதோ நீங்கள் கேட்ட கவிதை(கள்)...

கவிதை 1: அம்மா
--------------------------


Posted by Hello

கவிதை 2: காலச்சுருக்கம்
------------------------------------


Posted by Hello

கவிதை 3: பாட்டி
--------------------------


Posted by Hello

-------------------------------------
வாசித்துக் கருத்தைச் சொல்லுங்கள். அப்படியேனும் comments count அதிகரிக்கிறதா என்று பார்ப்போம்.

அடுத்த முறை பதிக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெருவது, உங்கள் நண்பன், R. K. மூர்த்தி.

3 Comments:

  • At 2:53 AM, Anonymous Anonymous said…

    good very good

     
  • At 11:26 AM, Blogger கீதா said…

    "அம்மா கோணலாய் இட்ட விபூதிக் கீற்றில்தான்
    என் முகம் அழகாய்த் தெரிகிறது"

    அழகான வரிகள். மனத்திரையில் அக்காட்சி தெரிகிறது.

    "என் பரீட்சைகளுக்காக என்னிலும்அதிகமாய்
    தூக்கம் தொலைத்தவள் அம்மா"

    - 100 சதவிகிதம் உண்மை

    கவிதைகள் அனைத்துமே அருமை

     
  • At 7:17 PM, Blogger சிங். செயகுமார். said…

    நண்பரே மூர்த்தி .வருஷத்தில் முதல் வணக்கம் சொல்லுகின்றேன் அதே வேளையில் நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருக்கிறீர்கள்?கொஞ்சம் குழப்பம் நீங்கள் உங்கள் பதிவினை பதிவு செய்த தேதியை கொஞ்சம் பாருங்கள்..

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Web Counter by TrafficFile.com